பாராட்டு விழா

கிழக்கு மாகாண விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து தேசிய போட்டிக்கு தெரிவான நற்பிட்டிமுனை வீரர்கள் இருவருக்கு நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் ஏற்பாட்டில் சாதனையாளர் பாராட்டு நடை. பெற்றது.

அல் -கரீம் பவுண்டேஷன் தலைவர் சீ. எம். ஹலீம் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் பரிதி வட்டம் வீசும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமீருன் அஸ்தா, நீளம் பாய்தல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும்,100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்ற ஜபாஹிர் முகம்மட் முஆத் ஆகியோருக்கே இப்பாராட்டு நடை. பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆஷிக் பிரதமர் அதிதியாக கலந்து கொண்டு வீரர்களைப். பாராட்டினார்.

நிகழ்வில் வீரத்திடல் அல் -ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் திருமதி ஏ. முனாஷிர், நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய உதவி அதிபர் மௌலவி ஏ. சாலித்தீன் அமைப்பின் செயலாளர் யூ. எல். எம். பாயிஸ், பொருளாளர் யூ. எம். இஸ்ஹாக் உட்பட வீரர்களின் பெற்றோர் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பாராட்டு விழா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More