இடமாற்றத்துக்கு எதிர்க்கும் கிராம மக்கள்

வவுனியா இராசேந்திரங்குளம் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராசேந்திரங்குளம், விநாயகபுரம், பாரதிபுரம், பொன்னாவரசன்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்த பகுதியில் கடமையேற்று 3 வருடங்களாகிய நிலையில் தற்போது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்தே குறித்த கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்போது அவர்கள் தெரிவிக்கையில்;

குறித்த உத்தியோகத்தர் கிராம மக்களுக்கு உதவிகள் செய்ய கூடியவர். கொரோனா காலங்களில் மக்களின் பாதுகாப்புக்காக மக்களின் வீடுகளுக்கே சமுர்த்தி கொடுப்பனவுகளையும் வழங்கியிருந்தார். மக்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்து அவர்களின் நிலை அறிந்து செயற்படுபவர். இவ்வாறான ஒருவரை இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது என்றனர்.

இதன்போது வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் விக்டர்ராஜ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் பொதுமக்களால் வழங்கப்பட்ட மகஜரையும் பெற்றார். அதனை அரசாங்க அதிபரிடம் சேர்ப்பிப்பதாக அவர் உறுதிமொழி வழங்கியதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இடமாற்றத்துக்கு எதிர்க்கும் கிராம மக்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More