மாணவர்களின் வசதிக்கேற்ப  பரீட்சைகளை நிலையங்கள் அமையவேண்டும்

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

மாணவர்களின் வசதிக்கேற்ப பரீட்சைகளை நிலையங்கள் அமையவேண்டும்

பரீட்சைகளை நடத்தும்போது மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமே தவிர பரீட்சை திணைக்களத்தின் வசதிக்கு அல்ல. மாணவர்கள் சிரமப்படாமல் பழக்கமான சூழலில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான பின்னணியை அமைப்பது கல்வி அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி குறைந்தது 75 மாணவர்களாவது பரீட்சைக்குத் தோற்றத் தகுதி பெற்றிருந்தால் அந்தப் பாடசாலையை பரீட்சை நிலையமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி எற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு எற்படாத வகையில் ஏதேனும் வசதிகளை வழங்க முடியுமாயின் அதற்காக அடுத்த சில நாட்களில் நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளர் . பரீட்சைகள் ஆணையாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் திங்கள் கிழமை (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கினார்.

திங்கள் கிழமை (29) ஆரம்பமான 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 3,568 நிலையங்களில் 472,553 மாணவர்கள் தோற்றுகின்றனர். அதற்காகப் சுமார் 40 ஆயிரம் அரச அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆனால் இம்முறை பல பாடசாலைகளின் மாணவர்கள் தாம் கல்வி கற்கும் பாடசாலைக்குப் பதிலாக வேறு பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக பெற்றோர்களும் மாணவர்களும் ஜனாதிபதியிடம் தெரிவித்ததைத் தொடர்ந்தே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராயந்ததில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு பரீட்சை நிலையங்களை மட்டுப்படுத்த கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தீர்மனித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் வசதிக்கேற்ப  பரீட்சைகளை நிலையங்கள் அமையவேண்டும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More