ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சுந்தரம் அருளம்பலத்திற்கு இறுதி மரியாதை

யாழ். - கீரிமலை பகுதியில் உயிரிழந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலத்துக்கு 21 வேட்டுகள் முழங்க நேற்று (26) வெள்ளிக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

இவர் கடந்த 1958 ஆம் ஆண்டு இராணுவத்தில் கடமையில் இணைந்து, 1980ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் மூப்பு காரணமாக கடந்த 23 ஆம் திகதி கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெற்று, கீரிமலை இந்து மயானத்தில் 21

துப்பாக்கி வேட்டுக்கள் முழங்க இராணுவ மரியாதையுடன் அவரது உடல் தீயில் சங்கமமானது. இந்த இறுதி நிகழ்வில் யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் போத்தொட்ட, இராணுவ படைப்பிரிவு அதிகாரிகள், இராணுவ சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சுந்தரம் அருளம்பலத்திற்கு இறுதி மரியாதை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More