சட்ட விரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்டவரின் சடலம் கையளிப்பு

கனடாவுக்கு சட்ட விரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்டு வியட்நாமில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் இருவர், தங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பவேண்டாம் என தெரிவித்து கடந்த மாதம் 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்தனர்.

இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்தார்.

துயர் பகிர்வோம்

உயிரிழந்த சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம், ஞாயிறு (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அத்துடன், திங்கள் (19) அவரின் இல்லத்தில் இறுதிக்கிரிகைகள் இடம் பெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பெட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சட்ட விரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்டவரின் சடலம் கையளிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More