செஞ்சோலை சிறுவர் இல்லப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு தினம்

செஞ்சோலை சிறுவர் இல்லம்மீது வான்படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமையாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டது.

முல்லைத்தீவு வல்லிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி இலங்கை வான்படையின் தாக்குதலில் 72 மாணவர்கள் பலியாகினர்.

இவர்களின் 16ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான நினைவுத் தூபியில் காலை 11:30 மணியளவில் இடம்பெற்றது.

மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தலில், கொல்லப்பட்டமாணவர்களின் நினைவுருவ படத்துக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜகுமாரால் படுகொலை தொடர்பான நினைவுரையும் ஆற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் பல்கலைக் கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செஞ்சோலை சிறுவர் இல்லப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு தினம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More