posted 30th March 2026
இன்றைய Serial Review & Analysis ஆனது 16ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதிகள் வரை உள்ளடக்கிய Serial Review & Analysisகளைக் கொண்டது.
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்கப்போவது;
- பூமிக்கு அபூர்பாவால் ஒழுக்காக்கப்பட்ட கல்யாணமானது, அதாவது, பூமியைப் பழி வாங்குவதற்காக, ககனைத்த தோற்கடிப்பதற்காக மனத்தினுள் வஞ்சத்தினை கொண்டவளால் அரங்கேற்றமானது ஆயத்தமாக இருந்தது.
- நட்சத்திராவும் தனது வழி தெழிவாகப் போகின்றதென்பதையிட்டு சந்தோஷத்தில் மிதந்து பூமியின் கழுத்தில் Chery கட்டப் போகும் தாலியினை இறுக்கி முடிவதற்காக முனைகையிலே Chery நட்சத்திராவிற்குத் தாலியினைக் கட்டினான். பூமிகான உறுதி மொழியானது காப்பாற்றப் பட்டது.
- ஷிவா, பூமியின் தம்பி பூமியைச் சந்தித்து தனது தகப்பனின் கடைசி ஆசையினை நிறைவேற்றுவதற்காக பூமியைத் தேடி ஓடோடி வந்தான்.
- நாசூக்காக கதைத்தாள் பூமி. Chery தனது மாப்பிள்ளை என்று தனது அப்பாவால் கூறுவதற்கான சூழலை உருவாக்கினாள். அபூர்வாவின் திட்டமானது புஸ்வாணமாகியது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Salangai Oli - சலங்கை ஒலி - 16 - 18.03.2026
பூமிக்கு கல்யாண ஒழுங்கானது செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பூமியின் விருப்பத்தினைக் கேட்காமல் பூமியின் அப்பா ஷரத்சந்திரா, அபூர்வாவுடன் சேர்ந்து மாப்பிள்ளை பார்த்து இன்று பெண் பார்க்க வரும்படி அழைத்தும் உள்ளார்கள். அபூர்வாவிற்கோ எப்படியாவது பூமியைத் தலை முழுகினால் முழுச் சொத்தும் தனதாகி விடும் என்பதுதான் நோக்கமே.
அபூர்வா பேசிய கல்யாணமானது, பூமிக்கென்றுதான். அதுவும் புறோக்கரினூடாகத்தான் ஒழுங்கு படுத்தப்பட்டது. புறோக்கரோ பூமிக்கில்லாமல், ஷரத்சந்திராவின் மகள் என்னும் போது அது நட்சத்திராவைத்தான் குறிக்கப்பட்டது. இதனைத் தெரியாமலென்று சொல்வதா அல்லது பூமியை மரியாதையீனப் படுத்துவதற்காக வேண்டுமென்று அபூர்வா போட்ட திட்டமா? இது அபூர்வாவின் திட்டமாகவும் இருக்கலாம். ஏனென்றால், பூமியைப் பழி வாங்குவதில் ஆபூர்வாதானே கூட ஆர்வமாக இருப்பதனால், அப்படியும் நினைப்பதற்கு கூடிய சந்தர்ப்பம் உண்டெனலாம்.
இதற்கு அடுத்த, ஆதாரமாக, பூமி மாப்பிள்ளை வீட்டாரால் மரியாதையீனப் படுத்தப்படுகையிலே, நட்சத்திரா மிகவும் சந்தோஷமாக இருந்தத்தைக் காணக்கூடியதாக இருந்தது. அது மட்டுமல்லாமல், நட்சத்திரா சந்தோஷமாக இருந்ததற்கு இந்தக் காரணத்தினை விட பூமிக்கு கல்யாணம் முடிந்து விட்டால், தனது பாதையானது ககன் மாமாவைக் clearவிடும் என்பதனையும் நட்சத்திராவிற்குரிய காரணமாக இருக்லாம்.
மாப்பிள்ளை வீட்டாரும் வந்தார்கள். பூமியைக் கண்டதும், பூமியும், ககனும் ஒரே இரவு ஒன்றாக தனிமையில் இருந்தது என்பது ஊடகங்கள் வழியாக உலகத்திற்கே தெரிந்திருக்கையிலே யார்தான் பூமியை கல்யாணம் பண்ணுவதற்கு வருவார்கள்? அவர்கள் என்ன தியாகிகளாகவா இருப்பார்கள்?
பூமி தனது கல்யாணத்தினை நிறுத்தியதற்கு சாரதாவின் தியாகம்தான் காரணம் என்று இப்போது Cheryகும் தெரியும், அத்துடன் கிறீஷ்ணபிராஷாத்திற்கும் தெரியும். இதனைத் தூண்டுபவர்களை எவருக்கு ஒப்பிடலாம் என்றால், கல்லறைகளைப் பார்வையிடப் போபவர்கள், கல்லறையின் மேலால் சப்பாத்துக் கால்களினால் ஏறி உழக்கிக் கொண்டு போவதற்கு ஒப்பாவார்கள்.
அதனைத்தான் பூமியும் மறைமுகமாக சொல்கின்றாள். அதாவது, ஷாரதா அத்தையின் தாலியினை அறுத்து விட்டு, தனக்கு தாலிக் கட்டி, ஷாரதாவின் வீட்டில் போய் ககனுடன் குடும்பம் நடத்தி வாழ வேண்டும் என்பதானது ஒரு பெண்ணானவளுக்கு கேவலமாக இருக்காதா? அதுவும் பூமியால் முடியாததொன்றாகும்.
பூமியும், ககனும் தனிமையாக இருந்ததை உலகிற்கு வெளி்ப்பட வைத்தது ககனின் அப்பா கிறிஷ்ணபிரஷாத்தான் என்பது ஷாரதாவிற்குத் தெரியும். இதனை யாரிடம்தான் சொல்ல முடியும்? இதுமட்டுமா, ஷாரதா அத்தையின் விவாகரத்தினை ககனிடமும் சொல்ல முடியாது. ஏனென்றால், ககனுக்கு தனது அம்மா கிறிஷ்ணபிரஷாத்தை விவாகரத்து செய்வதுதான் விருப்பமாகும். ஆனால், முழுமையான விஷயங்கள் எதுவும் பூமியால் அல்லது ஷாரதாவால் ககனுக்குச் சொல்லப்படவில்லை. அதாவது, அடிப்படையிலிருந்து எதுவுமே ககனுக்கு ஒருவரும் எதையுமே வெளிப்படுத்தவில்லை.
ஒருவேளை ஷாரதா விவாகரத்தினை அன்று குடும்பத்தின் முன்னால் வைத்துக் கேட்டதை, ககன் நினைத்திருக்கலாம், விவாகரத்திற்கு அம்மாதான் விருப்புகின்றா என்றால், கிறிஷ்ணபிரஷாத் விவாகரத்தினை கொடுக்க வேண்டியதுதானே! ஏன் அவர் பின்வாங்க வேண்டும்?
ஆனால், இதற்குக் காரணம் யாரு, ஷாரதாதானே, ஷரத்சந்திராவின் வீட்டிற்குப் போய் பூமியை, ககனுக்குக் கல்யாணம் பண்ணித்தரும்படி காலில் விழுந்து கேட்டதுதானே காரணம். அதுவும் தன்னால்தான் உருவானது என்று ஷாரதாவுக்கு விளங்கி இருக்குமோ தெரியவில்லை. ஆனால், ஷாரதாவின் பெலவீனத்தினை ஷரத்சந்திராவும், அபூர்வாவும் துல்லியமாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.
ஷாரதாவோ மாப்பிள்ளையின் தாய். அவவுக்குத்தான் அதிகாரம் கூட. ஷரத்சந்திராவோ பெண்ணின் வீட்டார். அதுமட்டுமல்லாமல், ஷாரதாவின் குடும்பமும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கின்றது. அப்படி இருக்கையிலே ஷாரதா ஏன் ஷரத்சந்திராவின் வீட்டிற்குப் போக வேண்டும்? ஷரத்சந்திராவின் காலில் விழ வேண்டும்? சொத்து எதையுமே கேட்கவில்லையே! அப்படி இருக்கையிலே ஷாரதா ஏன் ஷரத்சந்திராவின் வீட்டிலே மண்டியிட வேண்டும்? ஷாரதாவிற்கு இறுக்கிக் கதைக்கத் தெரியவில்லை என்றால், அவ ஏன் ஷரத்சந்திராவின் வீட்டிற்குப் போக வேண்டும்?
இதுவரைக்கும் ஷாரதா ஒருவருக்கும் இப்படி தனக்கு நடந்துவிட்டது என்று கூறவேயில்லை. ஆனால், பிரச்சினைகள் கூடுகையிலேதான் ஷாரதா இந்த விஷயத்தினை தனது கணவனாம் கிறீஷ்ணபிரஷாத்திடம் கூறினா. அவரும் வேறு ஒருவருக்கும் சொல்லாமல் இருந்துவிட்டு கடைசியாக பூமியின் கல்யாணத்தின் சற்று முன்னதாகத்தான் பூமியிடம் அதனைச் சொன்னார்.
இதன் காரணத்தால்தான் பூமியும் கொஞ்சம் உசாரானாள். கல்யாண நேரத்தில் பூமி என்னதான் நடக்கின்றது என்பதனை உன்னிப்பாக அவதானித்தாள். அப்போதுதான் மீரா, விவாகரத்துப் பத்திரத்தில் ஷாரதாவிடமும், கிறிஷ்ணபிரஷாத்திடமும் அவர்களைப் பயமுறுத்தி கையெழுத்து வாங்கியதனைக் கண்டு கொண்ட பூமி, அந்தப் பத்திரத்தைதினை ஒருவருக்கும் தெரியாமல் எடுத்து எரித்து அழித்து விட்டாள். அதுமட்டுமல்லாமல், இந்த விஷயத்தினை ஒருதருக்கும் தெரியாமலும் பூமி பார்த்துக் கொண்டாள்.
பூமியைப் பெண் பார்க்க வந்தவர்கள் பூமியைப் பற்றி உண்மையினை அதாவது ஊரார் கதைக்கும் உண்மைக் கதைகளை ஷரத்சந்திராவிடம் சொல்லி அவரின் குடும்பத்தினை விட, பூமியைக் கேவலமாகப் பேசினார்கள். இதனால், கோபம் கொண்ட ஷரத்சந்திரா மாப்பிள்ளை வீட்டாரை மரியாதையீனப் படுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். இதைத்தான் அபூர்வாவும் எதிர் பார்த்தாள். அது அன்று நன்கே நடைபெற்றது. சந்தோஷத்தில் மிதந்தாள் அபூர்வா. கோபத்தில் கொந்தளித்தார் ஷரத்சந்திரா.
இந்தக் கவலையில் வாடியிருக்கையிலே ஷரத்சந்திரா திடீரென அவர் மனதினில் பட்டதை உடனே மீராவிடம் கேட்டார். அதாவது, செறியை தனது மகள் பூமிக்கு கல்யாணம் பண்ணித் தருவியா என்றதற்கு, மீராவிற்கு சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. ஒருவரினதும் அபிப்பராயத்தினைக் கேட்காமல், அதுவும், பக்கத்தில் நின்று கொண்டிருந்த தனது புருஷன் கிறிஷ்ணபிரஷாத்திடம் கூட கேட்காமல், உடனே மீரா தனது அண்ணனுக்கு Cheryஐ பூமிக்குக் கட்டித் தருவதாக வாக்குக் கொடுத்தாள். இப்போது செறிக்கும், பூமிக்கும் கல்யாணம் அவர்களின் விருப்பு வெறுப்பு ஒன்றையும் கேட்காமல் ஒழுங்காக்கப் பட்டது. முடிவாக்கப்பட்டது.
காலமும், நேரமும் கூடிவந்தது. பூமியும், Cheryயும் மணமேடையில் வலுகட்டாயமாக ஏற்றப்பட்டார்கள். இருவரினது முகங்களும் பேயறைந்தது போன்றிருந்தன. இதனை ஒருவரும் பார்க்கவில்லையா அல்லது பார்த்தும் வாயடைத்துப் போயிருந்தனரா?
பூமியும் ஒன்றும் செய்ய முடியாத நிலையினிலும், நட்சத்திராவின் கேலிகளை எதிர்த்துச் சொல்ல முடியாமலும், கூண்டினிலே அடைக்கப்பட்ட கிளி போல அடங்கிப் போய், அபூர்வாவின் திட்டமானது வெற்றி பெறட்டும் என்னால் இனி என்னதான் செய்ய முடியும் என்று வெட்கித்துப் போய் மணமேடையில் உட்காந்திருந்தாள் பூமி. ககனும் தனது மனைவியாக வரவிருந்த பூமியின் கல்யாணத்திற்கு அர்சதை எடுத்து ஆசீர் பண்ணுவதற்காக வந்து ஆட்களுடன் ஆட்களாக பின்னால் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தான்.
அதுமட்டுமல்லாமல், மீராவால் கேவலப்படுத்தப்பட்டான், ககன். எல்லாவற்றினையும் பொறுத்துக் கொண்டான் ககன். தனது அன்பான தம்பிக்குத்தானே பூமியுடன் கல்யாணம் நடக்கப் போகின்றது என்று தன்னைத்தானே தேற்றியவனாக நின்று கொண்டிருக்கையிலே, Chery யும் எழுந்து பூமிக்குத் தாலியினைக் கட்டப் போகையிலே, Chery ஜன்னல் வழியாக பூமிக்குக் கொடுத்த வாக்கினை காப்பாற்றும் அந்த கடைசிக் கணம் வந்தது. பூமியின் கழுத்தில் Chery கட்டப்போகும் தாலியினை இறுக்கமாகக் கட்டுவதற்காக, அதாவது, பூமியின் கதை கந்தல் என்று மனத்தினில் குதூகலித்தவளாய் குனிந்து ஆயத்தமானாள் நட்சத்திரா. அவள் நினைத்தாளா ஷரத்சந்திராவிற்கு Chery மாப்பிள்ளையாக வரப்போகின்றான் என்று.
அந்தக் கணம் நட்சத்திராவின் கழுத்தில் Cherry தாலியினைக் கட்டினான். பணத் திமிரிலும், ஆணவத்தின் உச்சத்திலும் ஆடிக் கொண்டிருந்த ஷரத்சந்திராவினதும், அபூர்வாவினதும் ஆணி வேர்களானது அறுக்கப்பட்டன. இப்பவும் ஷரத்சந்திராவிற்கு Chery ஏன் நட்சத்திராவுக்குத் தாலி கட்டினான் என்பது புரியவில்லை. ஏனென்றால், இந்த விஷயம் ஷரத்சந்திராவிற்கு அபூர்வா சொல்லவில்லையே!
பூமியின் தம்பி, சிவா, அவர்களது ஊரான றாஜபாளையத்தினை விட்டு உயிருக்குப் பயந்து ஓடோடி வந்தான், எப்படியாவது தனது அக்கா பூமியைச் சந்தித்து அவளது அந்த பொம்மையினைக் கையளித்து விட வேண்டும் என்று. பின்னால், கொலைஞர்கள் துரத்துகையில் சிவாவோ பொலிஸிடம் சரணடைந்தான். பூமிதான், தனது அக்காதான் ஷரத்சந்திராவின் மகள் என்று சிவா பொலிஸில் இருக்கும் போது அறிந்து கொண்டான்.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் பதிவிடுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!