Mahanadhi - மகாநதி - 16 - 20.03.2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 16ஆம், 21ஆம் திகதிகள் வரையிலான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.

இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;

  • காவேரியின் அன்பானது அவளையும் மீறி அம்முவின் மேலே சாய்ந்தது. பிழையாக விழங்கினார்கள் சக ஊழியர்கள். புகார் பண்ணினார்கள். அம்மு கடத்தப்பட்டாள். காரணம், காவேரியினதும், விஜேயினதும் கவலையீனமா? அல்லது புகாரா?
  • அம்முவைக் கண்ட கங்காவும், ஜமூனாவும் கண் கலங்கினார்கள். இல்லை என்றிருந்த, இனி காணமாட்டோம் என்று பறித்துச் செல்லப்பட்ட இந்த சிசு இப்போது ஓடி வந்து முன்னாலே நின்றதனை நம்ப முடியாமல் உருக்கிய பாசமது – கட்டி அணைத்து தீர்த்து விட்டார்கள்.
  • உண்மையாக வாழ்பவர்களுக்கு எப்போது விடதலை கிடைக்கும் றாகாவ் போன்ற கொடியவர்களிடமிருந்து?

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

Mahanadhi - மகாநதி - 16 - 21.03.2026

காவேரியின் அக்காவும், தங்கையும் காவேரியின் பிறந்தநாள் விழாவினைக் கொண்டாட வீட்டிற்கு வருகை தந்துள்ளார்கள். அத்துடன், கங்காவின் மகள், யாழினியும் சேர்ந்து வந்தாள். இந்த பிறந்த நாளுக்கு அம்மு சமூகமளித்திருக்கையிலே அங்கு தனது வயசுடைய யாழினையையும் சந்தித்தாள். இருவரும் ஒன்றாகினர். இதுதான் இரத்த உறவுகளின் ஒன்றாகல் என்பது.

ஆனால், இப்படியான உறவு இப்போதைய காலத்தில் உண்மையாக இருக்குமா? இன்றைய கால கட்டத்தில் இந்த உறவானது அருகிப் போவதை ஒருவராலும் தடுத்து நிறுத்தக் கூடாது. மீண்டும் அந்த குடும்ப உறவினை உயிர்ப்பிக்க முயன்றாலும் தோற்றுப் போவதற்குக் கூடுதலான சந்தர்ப்பங்கள்தான் மிஞ்சும் என்பது ஒரு பக்கமான ஊகம்.

அம்முவின் இரங்கலான கதையினை காவேரி கேக்கினை வெட்ட முயலுகையில் அவள் மனதினில் ஊற்றெடுத்தது. அந்தக் கணமே காவேரி தனது மகள் காவேரியை, அம்முவை, கூப்பிட்டு அம்முவின் கையாலே கேக்கினை வெட்டி பிறந்தநாளினை ஆரம்பித்தாள். இதனைக் கண்டது அனைவரும் கலங்கிப் போனார்கள். இது எப்போதுதான் உண்மையாகும் என்ற ஏக்கம் அனைவரின் மேலும் இருந்ததினை காணக்கூடியதாக இருந்தது.

காவேரியும், சாரதாவும் விஜேயின் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றார்கள். காவேரியையும், சாரதாவையும் புதிதான விருந்தாளிகள் போலத்தான் விஜேயின் குடும்பம் வரவேற்றார்கள், கதைத்தார்கள். இப்படித்தான் நீங்கள் காவேரியின் குடும்பத்துடன் பழக வேண்டும் என்று விஜேய் ஏற்கனவே வீட்டில் சொல்லி வைத்திருந்தார். அதன்படி விஜேயின் குடும்பமும் அப்படியே நடந்து கொண்டிருந்தாலும், சாரதா, கல்யாணிப்பாட்டியின் போட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தில் காவேரிக்குச் சந்தேகம் வந்து விட்டது.

எப்படித்தான் சாரதாவின் குடும்பத்தினை திட்டுத் தள்ளினாலும், அம்முவை சாரதாவின் குடும்பத்திலிருந்து பிரித்திருந்தாலும், காவேரியையும், விஜேயையும் பிரித்திருந்தாலும், இப்போது கல்யாணிப் பாட்டி உயிருடன் இல்லாதது சாரதாவின் நெஞ்சினை நெகிழ வைத்தது. கவலை தோய்ந்த முகத்தின் பாவனையினை சாரதாவால் மறைக்க முடியவில்லை.

அம்முவும் மிகவும் சுதந்திரமாக இப்போது இருக்கின்றாள். ஆனால், பாடசாலையில் அம்முவோ, காவேரியுடன் கூட நேரம் செலவளித்தாள். இதனை பார்த்த ஒரு சில பாடசாலையில் வேலை செய்பவர்களால் தலைமை ஆசிரியைக்கு புகார் செய்யப்பட்டது. இப்படியாகக் கூறப்பட்ட புகாரானது காவேரியை மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது. காவேரியும் மனமுடைந்திருந்தினால் அம்முவை காவேரியோ தன் வீட்டிற்குக் கூட்டிச் செல்லாமல் பாடசாலையிலேயே விட்டுச் செல்லத் துணிந்தாள்.

திடீரென குழந்தையின் மேல் வைத்த அன்பினை முழுமையாக வெறுத்தால், குழந்தை அம்முவிற்கு என்னதான் விளங்கும்? இதனால் குழந்தை அம்முவிற்குத் தாக்கத்தினை கொடுத்ததுதான் மிச்சம். துவண்டு போனாள்.

அதுவும் வேண்டுமென்று அல்ல. அம்முவின் தகப்பன் விஜேய் வருவார் என்பதனால்தான். ஆனால், அம்முவின் அப்பா வர மாட்டார் என்று காவேரிக்குத் தெரியாதே! வீட்டிற்குப் போன காவேரி மனக் குளப்பத்தில் இருந்தாள். அவளின் மனம் மேலும் குளம்பியது விஜேய், அம்முவைத் தேடி சாரதாவின் வீட்டிற்கு வந்த பின்பு. பதறிப் போனாள் காவேரி, குளம்ப்பிப் போனா சாரதா.

இதனால் விஜேயினை மனத்தினில் பயம் ஏற்பட்டாலும், அது முன்னையது போன்றில்லை என்ற ஒன்றும் விஜேயுக்குத் தோன்றவில்லை. ஆனால், பீதி விஜயை பிடிக்கத் தொடங்கியது, அன்பு பசுபதியின் மகன் றாகவைக் கண்டனான், கதைத்தனான் என்று சொன்ன பின்பில்லிருந்து.

சிறையில் இருந்து றாகவ் வெளியில் வந்து விட்டான் என்றும், அவன் அனைவரையும் பழி வாங்காமல் விடமாட்டேன் என்று தனக்குக் கூறியதையும் விஜேய் வீட்டாரிடம் சொன்னான். ஆனால், அவன் எங்குதான் இருப்பான் என்று தெரியாததினால், அன்பு சொன்ன வீட்டு விலாசத்திற்குத் தேடிச் சென்றும் அங்கு அவனைப் பிடிக்க முடியவில்லை. ஆனால், றாகாவின் கார் இலக்கத்தினை ஞாபகப்படுத்திய அன்பின் உதவியானது அப்போது விஜேயுக்கு மிக்க பயனுள்ளதாகிற்று.

காவேரியின் பிறந்த நாளானது மிகவும் மறக்க முடியாததொன்றாக சாரதாவின் பிள்ளைகளுக்கு இருந்தது. கங்காவோ அம்முவைக் கண்டதும் அவவின் கண்கள் கலங்கி விட்டன. பெரியம்மாவாச்சே அம்முவிற்கு கங்கா. பாசத்தினைக் கொட்ட அவவோ மறக்கவில்லை. அத்துடன், ஜமூனாவால் மிச்ச பாசமும் அம்முவின் மேலே கொட்டப்பட்டு களையினைத் தீர்த்தார்கள். ஐந்து வருடங்கள் கடந்த பின்பு விஜேயையும், பிள்ளையையும் காணுவோமா என்றிருந்த சாரதாவின் குடும்பத்திற்கு இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தது.

தாயின் பாசத்தினை இழந்தவளாய் அம்மு. உண்மையான உறவுகளான சாரதாவின் குடும்பத்தின் அரவணைப்பும் இல்லாமல் ஐந்து வயதினிலே அதுவும் காவேரியின் பாடசாலையிலே மாணவியாகவும் படிக்க வேண்டும் என்பது கடவுளின் திட்டமே. கடவுள் சேர்க்க நினைத்தால் ஒருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இழுத்துக் கொண்டு வந்து சேர்க்காமல் விடமாட்டார்.

அதுதான் இப்போது காவேரிக்கும் நடந்துள்ளது. விஜேய் மட்டும்தான் உண்மையாக சுயநினைவோடே இருப்பது. காவேரிக்கோ சுயநினைவின்றி இருப்பதும், தனக்கு விபத்தின் பின்புதான் அவள் சுயநினைவினை இழந்தாள் என்பதும் தெரியப்படுத்தப்பட்டாயிற்று.

ஆனால், காவேரி்க்கு வரும் பழைய நினைவுகளாவன், ஏன் தனக்கு இப்படியான நினைவுகள் வருகி்ன்றன என்பது இன்னமும் கேள்வியாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றது.

இனியும் நினைவிகளானது மீண்டும் வருமா? இதற்கு அம்முவின் கடத்தலானது உதவுமா?

உண்மையினை காவேரிக்கு றாகவ் சொல்லுவானா? இதனால் காவேரிக்கு ஏதாவது மனநிலையில் ஆபத்து வருமா? அல்லது காவேரி சாதாண நிலைக்குத் திரும்புவாவா?

எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)